thendral saravanan

Sunday, February 20, 2011

Happy Faces!

Be happy...
Don't hide your Smile as it goes miles...

12 comments:

A said...

புன்னகை,

மொழிகளால்
நொறுக்கப்படாத
பொது மொழி.

வார்த்தைகளால்
இறுக்கப்படாத
வாய் மொழி.

உள்ளத்தின் விதைகள்
உதட்டில் விரிக்கும்
உன்னத மலர் தான்
புன்னகை.

மகிழ்வின் வாடைக் காற்று
தொட்டு
மொட்டுப் பூட்டை
உடைத்து,
பட்டென்று வரும்
பரவசப் பூ தான் புன்னகை.

ஒரு வார்த்தையில்
சொல்லும்
நட்பின் வரலாறு தானே
புன்னகை.

விலங்கிலிருந்து மனிதன்
விலகியே இருப்பது
புன்னகையின்
புண்ணியத்தினால் தானே.

உதடுகளை விரியுங்கள்
புன்னகை புரியுங்கள்
சிரிப்புக்கு அது தான்
தாய் வீடு.

மகிழ்ச்சிக்கு அது தான்
மறு வீடு.

உள்ளக் கவலைகளை
ஏன்
அறுத்தெறிய வேண்டும்,
ஒற்றைப் புன்னகை
அதைத்
துடைத்தெறியும் போது.

புன்னகை இல்லாத
சாலைகளில் நடப்பது
நரகத்தின் வாசலில்
தீக்குளிப்பது போன்றதே.

இரு கை இல்லாதவர்
ஊனமானவரல்ல
புன்ன’கை’ இல்லாதவரே
உள்ளுக்குள் ஊனமானவர்.

புன்னகை,
ஒரு வரிக் கவிதையாய்
உருவாகட்டும்,
புரட்டிப் படிக்கும்
புத்தகமாகவேண்டாம்.

புன்னகை,
ஒரு முகத்தோடு
உலா வரட்டும்,
இராவணத் தலைகளை
உள்ளே
இரகசியமாய் வைக்க வேண்டாம்.

புன்னகைக்க
மறந்தோர்க்கு
ஓர் வேண்டுகோள்.

ஆனா, ஆவன்னா
சொல்லிக் கொடுக்கும் சாக்கில்
மெல்லமாய்
கற்றுக் கொள்ளுங்கள்
ஓர்
மழலையிடம், புன்னகையை.

A said...

உன் புன்னகையை....!!!


சிரித்து கொண்டே
பறித்து சென்றாயா
என் தோட்டத்து
ரோஜாக்களை....
பூக்களின்
காம்பில்
அதைவிட
அழகான
உன் புன்னகையை
விட்டு சென்றிருக்கிறாய்.....!!!

thendralsaravanan said...

யம்மாடி!!!!என்னம்மா கவிதையில் கலக்கியிருக்கீங்க!
சார் ,முதல்ல தனியா உங்கள் வலைதளத்தை நிறுவுங்கள்.அப்பதான் உங்க திறமை தெரியும்!பள்ளி வலையில் உங்கள் தனி பதிவுகளை காண முடிவதில்லை!
வாழ்த்துக்கள்!

thendralsaravanan said...

மிக மிக அழகான கவிதை சார்.மறுபடியும் மறுபடியும் படிக்க தூண்டுகிறது.

A said...

வானம் வசப்படும்!

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "

thendralsaravanan said...

excellent!

Sharon said...

Such happy, smiling faces! They all look like they are happy to send this picture across the many miles!

Love it! Great post!

ruthinian said...

oh this is such a lovely photo. i can see in the faces of those kids pure happiness something that we adults are trying hard to achieve and yet hindered by our own personal struggles and worries.

thendralsaravanan said...

@Sharon,
Great ...all the smiling faces belonged to the children from a very small village...innocence that i sent to miles...thank you for the prompt reply!

thendralsaravanan said...

Well said Ruthi.
we left the smiles miles away...We are in search of that!

Unknown said...

i always like photos of smiling people, especially smiling children. and your quote is so true.

thendralsaravanan said...

thank you Gary as you reply me even in your busy schedule !