thendral saravanan

Thursday, October 14, 2010

படி மகளே படி.....

மக்குப் பய மகன் நான்
மச்சு வீட்ல பிறக்கல.


கையும் காலும் நல்லாயிருந்தும்
கால் காசுத் தேறலே.


என்ன செய்ய எங்கப்பன்
பள்ளிக்கூடம் அனுப்பலே .


வாத்தியாரு வீட்டுக்கு வந்து
கேட்டுப் பார்த்தும் பயனில்ல.


சின்னப் பைய எனக்கப்ப
விவரமும் தான் பத்தல .


வளர்ந்த பிறகு ஏங்கி
இப்போ எதுவும் இங்கே நடக்கல.


நான் பெத்த புள்ள தாயீ
நாலெழுத்துப் படிச்சு வா.


என்னைப் போல புலம்பாம 
பள்ளிக்குத் தான் சென்று வா.                                                                                                   


பட்டங்களை வென்று வா
பார் புகழ வாழ்ந்து வா.
                              -தென்றல்
                          

4 comments:

Sharon said...

I take it that these are some of your students. (If I am wrong, let me know) They appear really interested in something!

Sharon said...

What language is this, anyway? It sure is pretty!

thendralsaravanan said...

dear,
i wrote in Tamil.
yes,they are my students with much curiosity to learn a word game conducted..
That is my poem in Tamil ...a father who was illiterate lamenting over his illiteracy and wanted his daughter to go to school and get proper education...

Sharon said...

Beautiful children!