thendral saravanan

Saturday, August 14, 2010

ஆங்கிலம் பயில்

தமிழைப் போற்றும் என் தந்தை புதிய மொழி கற்க தடையாய் 
இருந்ததில்லை.


அன்பில் விளைந்த தென்றலுக்கு,


வாழ்த்துக்கள்.


நிறையவே படி.நிறையப் பேசு.அன்புடன் பழகு .
எதிலும் எச்சரிக்கை,கவனம் காட்டு.அச்சம் தவிர்.
இப்படி உனக்கு அறிவுரைகள் கூறுவதை விட
'நிலைமை 'அறிந்து புரிந்து முன்னேறுக.


உன் மன எழுச்சிகளை அஞ்சாமல் எழுது.
நீ இன்று விவரம் அறிந்தவள்.விவரம் அரிய ஆர்வம் உடையவள்!

தமிழில் சிந்தி-பிறகு ஆங்கிலத்தில் எழுது...பிறகு ..தமிழை மற.
ஆங்கிலத்திலேயே சிந்திக்க வரும்.இப்படி ஒரு புதிய மொழியைக்கற்கவும்!
எனவே ஆங்கிலம் தன்வயப்படும் வரை தொடர்க. முயல்க!


உன் ஆங்கில அறிவு தமிழ் மக்கள் பயனுற வளர்தல் வேண்டும்.
உலக இலக்கியம் யாவும் உவந்து பயில்-கல்வியியல் அதற்கு உறுதுணைப் பாடமாக அமையும் என  நம்புகிறேன்.


தலைமை கொள் -கல்வியில் வாழ்வில்
கலை பயில் தெளிவில்
தலைமை கொள்...


அன்பாலும் உண்மையாலும் உலகை வெல்ல 
அறிவு முயற்சி மேற்கொள்!
யாதானும் நாடாம் ; ஊராம்...
எனவே கல்.


வாழ்க்கைக் கல்வி என்னும் 
உண்மை அறிந்து நட. 

                                                                   -அம்மா அப்பா 

புத்தாண்டில்

01/01/91
அப்பா எழுதியது,


குழந்தைகளே,


காண அரிய ,காலம் போனது,
புதிய காலம் கையினில் சேர்ந்தது -


கையில் உள்ளதை மிக்க கவனமாய் 
மெல்ல விழிப்பாய்ச் செய்க ,செலவு !


புதிய பூக்களாய் நன்மை பொழிக!
புயலின் வேகமாய்ப் புன்மை சாடுக!


விதியைப் படைப்பவன் மாந்தனே -அந்த 
விதியை மாற்றிட வல்லவன் மாந்தனே !


எனவே, சோர்வுகள் வேண்டாம்;
சுறுசுறுப்பாய் வாழப் பழகுங்கள் .
விரும்பிய சிறந்த வாழ்க்கை அமையும்.
                        -அம்மா அப்பா .

என் தந்தையின் கடிதம்

கல்லூரியில் படிக்கும் போது குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட நான் ' செலவு அதிகம் ஆகுமே' என்று கவலைப்பட்ட பொழுது  ,அப்பாவின் கடிதம் உற்ச்சாகத்தை கொடுத்தது. எனக்கு என் தந்தை எழுதிய கடிதங்கள் கல்லூரியில் படிக்கும் போது மட்டுமல்ல இப்போதும் உற்சசாகத்தைக் கொடுப்பவை.


அன்புள்ள மகள் தென்றலுக்கு,
அம்மா அப்பா வாழ்த்துக்களுடன்,


அரிய பல நூல் கற்று நீ 
அடையும் பயன் ஆயிரமே 
ஆனாலும் என் மகளே ,விரியும் இந்த வானின் கீழ் 
விளங்கும் புவி மக்களை நீ 
விளங்கிக் கொள்ள
உதவும் இந்த 'செலவு ' போலச் 
சிறந்ததும் தான் வேறில்லை அறிவாய் நீ.
அதையெல்லாம் எழுதி வை.
எண்ணி வை;இலக்கியமாய்
விரியும் உன் பேர் கூறும் !


அன்பு மகளே,
தமிழன் பதித்த தடம் நீ போகும் 
தரையெல்லாம் காணலாம்-
இந்த உண்மை எண்ணி நீ,
நீ வைக்கும் மென் சீரடிக்குப் 
புதுப்பொருளைப் படைத்து வா.
தில்லிச் செலவைத்
தீரமுள்ளதாக்கி வா வாழ்க .





மாலை நேரம்

 அந்தி சாயும் அழகானப் பொழுது என் கேமராவில் சிக்கியது
இடம்: ராமநாதபுரம்.

Tuesday, August 10, 2010

My pencil drawings









படித்ததில் பிடித்தது ...

சிலப்பதிகாரம் 
பால் நகையாள்-வெண்முத்து 
பல் நகையாள் 
கால் நகையால்
வாய் நகை போய்
கழுத்து நகை இழந்த கதை.


Saturday, August 7, 2010

சுற்றுலா






சின்னச் சிரிப்பும் ,சிந்திக்கவைக்கும் பேச்சும்,துள்ளல் நடையும் ,துடிப்பான செயலும் ,கண்டாலே இன்பம் ,கவிதை பிறக்கும் .
மாணவர்கள் -மான் அவர்கள் நல்ல வாய்ப்பு -நல்வழி காட்ட ,நட்பு பாராட்ட நன்றி சொல்வேன்!
தென்திசை நோக்கி எங்கள் பயணம் மாட கோபுரங்கள் ஆளும் மதுரை மீனாட்சி ,பழமுதிர்ச் சோலை ,அழகர் கோயில் ,திருமலை நாயக்கர் மஹால்...
தெவிட்டாது ,கண் சிமிட்டாது -குறிப்பெடுத்து நின்றிருந்தனர் கண்மணிகள் .மல்லிகை மணம் மனசெல்லாம் நிறைத்து கன்னியாகுமரி நோக்கி மறுநாள் பயணம் .
காலைக்கதிரவன் கணக்காய் வருவது கண்டு குதித்து கும்மாளமிட்டனர் செல்லங்கள்.விவேகானந்தர் பாறை பார்த்து பரவசமாய் வணங்கி எழுந்தனர்.
விண்ணைத் தொட்ட வள்ளுவனைகும்பிட்டு மகிழ்ந்தனர்.இராமபக்தன் சுசிந்தரத்தில் கொண்டகோலம் கண்டபின் சென்றனர் முட்டம் நோக்கி .முட்டும் மூன்று கடல் சொல்லும் ரகசியத்தை கண்களால் படமெடுத்தனர் ;களிப்புற்றனர் .
அப்பப்பா ...எத்தனைகேள்விகள் வரலாற்று சிறப்பறிய ஆசைகள் பக்குவமாய் நான் கூறும் பதில் கேட்டு பரவசமாய் கேட்டனர் 'மீண்டும் வருவோமா?'                                                                -தென்றல்.   


உங்களுக்கு...


.

நான் தயாரித்த சிறுவர் முகமூடிகள்!!!

Tuesday, August 3, 2010

சின்னச் சிரிப்பு



சின்னச் சிரிப்பு உன் 
செவ்விதழில் விளைந்த பூ .


முத்து முத்தாய் உன் பேச்சு 
முத்தமிழே வியக்கும் சொல்லாச்சு .


மதுரை மல்லி போல் என்
மனசெல்லாம் நிறைஞ்சாச்சு .
                                         -தென்றல் 

Teacher

காலத்தின் கோலம் !

வசந்த காலம் 

கோடைகாலம் 


வெண்பட்டுப் பூச்சி



வெள்ளை ஆடை கட்டிக் கொண்டு
விழா எடுக்கிறாய்.
விருப்பமான இடத்திலெல்லாம்
சென்று அமர்கிறாய்.
கண் கவரும் உன் அழகை
கண்டு மகிழ்கிறோம் .
காலமெல்லாம் உன்னைச் சுற்றி
கவலை மறக்கிறோம் .
                          -தென்றல்



பட்டாம்பூச்சியே


பட்டு பூக்கள் தானோ நீ பட்டாம்பூச்சியே
பல நிறங்கள் கொண்டாய் நீ பட்டாம்பூச்சியே


பச்சை புல் தரையும் பட்டாம்பூச்சியே
உன் வண்ணம் கண்டு வியக்குதம்மா பட்டாம்பூச்சியே


விந்தைகள் பல புரிந்தாய் பட்டாம்பூச்சியே
வித்தைகளை எங்கே கற்றாய் பட்டாம்பூச்சியே


சின்னஞ்சிறுவர் கையில் பட்டாம்பூச்சியே
சிக்காமல் சுற்றுகிறாய் பட்டாம்பூச்சியே


சித்திரம் போல் கண்ணைக் கவரும் பட்டாம்பூச்சியே
சிந்தையினில் நீ புகுந்தாய் பட்டாம்பூச்சியே
                                                                 -தென்றல்           

Sunday, August 1, 2010

மழை


வானளாவிய மரங்கள்
பலமாடிக் கட்டிடங்கள்
குளிப்பாட்ட ஆளில்லை -நீ வருவாயா?


வண்ண வண்ண மலர்கள்
வண்ணத்துப் பூச்சிகள்
விளையாட -நீ வருவாயா?


மண் வளம் பெற
மனிதன் நலம் பெற
மறக்காமல் -நீ வருவாயா?


கண்மணிகள் விளையாட
கவிஞர்கள் கவிபாடச்
சளைக்காமல் -நீ வருவாயா?


முத்து முத்தாய் உன் அழகு
முகிழ்ந்திடக் கூடும் மனது
முத்தமிட வான் மழையே -நீ வருவாயா?


காத்திருக்கும் விவசாயி
கலங்கடிக்கும் அவன் நிலைமை
கண்சிமிட்டும் நேரத்தில் -நீ வருவாயா?


ஆறு குளம் நிறைந்திடவே
ஊரு கண்மாய் பொங்கிடவே
காடுவளம் காணவே -நீ வருவாயா?
                                     - தென்றல்.